ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது, அவருக்கும் நாட்டுக்கும் நல்லது: சு.ப.வீரபாண்டியன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தன்னுடைய அரசியல் 'ஆன்மீக அரசியல்' என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதை இனிமேல்தான் மக்கள் பார்க்க போகின்றார்கள் என்றும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கூறினார்
கடந்த 1996ஆம் ஆண்டு ரஜினியின் ஒரே ஒரு பேட்டி ஒரு ஆட்சியையே மாற்றிய நிலையில் அவரே நேரடி அரசியல் குதித்தால் ஆட்சியை பிடிப்பது நிச்சயம் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் பல வருட காலமாக முதல்வர் கனவில் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் ரஜினியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக இருந்தது
எனவே ரஜினி அரசியலுக்கு வரட்டும் அவரை வென்று காட்டுகிறோம் என்று கூறுவதற்கு பதிலாக அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்ற ரீதியில் பல அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். அந்த வகையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, 'ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது, அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது” என்று கூறியுள்ளார். சுப வீரபாண்டியன் உள்பட இதுவரை ஒரு அரசியல்வாதி கூட ரஜினியை அரசியலில் வீழ்த்தி காட்டுகிறேன் என்று சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments