ரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா? இல்லை பள்ளிக்கூடமா?
- IndiaGlitz, [Tuesday,June 20 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட லட்டர்பேட் கட்சிகள் பதறுகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே பதறும் இந்த தலைவர்கள், ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால் என்ன ஆவார்களோ தெரியவில்லை
இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெறும் 1.5 சதவிகித ஓட்டுக்களை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்த அணு உலை போராளி என்று கூறிக்கொள்ளும் சுப.உதயகுமார் ரஜினிக்கு 4 கேள்விகள் கேட்டுள்ளார். இந்த நான்கு கேள்விகளுக்கும் ரஜினி பதில் கூறிவிட்டால் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அவர் சேர்ந்துவிடுவாராம். அவர் கேட்டுள்ள கேள்விகள் இதோ இதுதான்"
1.ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ரஜினிகாந்த் சரியாக அடையாளப்படுத்துவாரா?
2. நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
3. எங்கள் இடிந்தகரை பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடங்கள் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
4. கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?
உதயகுமாரின் இந்த கேள்விகளுக்கு ரஜினி ரசிகர்களும் மற்றவர்களும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கருத்துக்களை கூறி வருகின்றனர். அரசியல் என்பது கேள்வி கேட்டு பதில் எழுதும் பள்ளிக்கூட பரிட்சை அல்ல, மக்களின் பிரச்சனைகள் தீர்க்க நல்ல மனசு இருந்தால் போதும், மார்க் தேவையில்லை என்ற கருத்தை நடுநிலையாளர்கள் உள்பட பலரும் கூறி வருகின்றனர்.