இயக்குநர்- இன்ஸ்பெக்டர் வரை பாலியல் தொல்லை கொடுத்ததாக லிஸ்ட் போட்டு இளம் நடிகை புகார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள நடிகையும் உளவியல் நிபுணருமான ரேவதி சம்பத் (27) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 நபர்களின் பெயர்களை லிஸ்ட் போட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருப்பது தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகையும் உளவியல் நிபுணரான ரேவதி சம்பத், சமூக அர்வலராகவும் இயங்கிவருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “பட்னாகர்” எனும் திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் அறிமுகமானார். அவர் தற்போது “உடலியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளின் பெயர்கள்” எனக் குறிப்பிட்டு ஒரு பெரிய லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளார்.
அந்த லிஸ்ட்டில் 14 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான சித்திக்கின் பெயரும் இடம் பிடித்து இருக்கிறது.
1.ராஜேஷ் தொச்சிவர் இவர் பட்னாகர் திரைப்படத்தின் இயக்குநர்
2. நடிகர் சித்திக்
3. ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்)
4. நடிகர் சிஜு
5. அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
6. டாக்டர் அஜய் பிரபாகர்
7. நந்து அசோகன் (டி.ஒய்.எப்.ஐ. யூனிட் கமிட்டி உறுப்பினர்)
8. மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குநர்)
9. ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் (விளம்பர இயக்குநர்)
10. ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்)
11. சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட்)
12. பினு (சப் இன்ஸ்பெக்டர்)
இவர்களைத் தவிர இணையத்தில் கேலி செய்ததாக சவுரப் கிருஷ்ணன் என்பவரின் பெயரையும் துஷ்பிரயோகம் செய்ததாக எம்.எஸ்.பிதுஷ் நந்து அசோகன் பெயரையும் கூறியிருக்கிறார். இதற்கு முன்பே நடிகர் சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது போன்ற விவரங்களை கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ரேவதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தற்போது வெளியிட்டு உள்ள இந்த லிஸ்டிலும் நடிகர் சித்தின் பெயர் இடம்பிடித்து இருக்கிறது.
இந்நிலையில் லிஸ்ட் போட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகை ஃபேஸ்புக்கில் புகார் தெரிவித்து இருப்பது சினிமா துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments