close
Choose your channels

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. 'தளபதி 69' படத்தில் இணைந்த ஸ்டைலிஷ் இயக்குனர்..!

Thursday, October 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.. தளபதி 69 படத்தில் இணைந்த ஸ்டைலிஷ் இயக்குனர்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சற்றுமுன், இப்படத்தில் ஸ்டைலிஷ் இயக்குனர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது யாரும் எதிர்பாராத திருப்பமாக கருதப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தளபதி 69’. இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும் நாளை மறுநாள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

முதல் கட்டமாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்த நிலையில் அடுத்த கட்டமாக பூஜா ஹெக்டே இணைந்தார் என்பதும் இதனை அடுத்து மமிதா பாஜு இணைந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஸ்டைலிஷ் இயக்குனரான கௌதம் மேனன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தில் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். அவரது கதாபாத்திரம் உறுதியாக வலிமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment