தளபதி விஜய்க்கு ஸ்டண்ட் சில்வா கூறிய நன்றி
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு ஆறுதல் கூறுவதாக சென்ற பலர் அந்த வருகையை தங்களுடைய சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தி கொண்டவர்களின் மத்தியில் எந்தவித ஆரவாரமும், விளம்பரமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு தளபதி விஜய் ஆறுதல் கூறி வந்ததை திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
அவ்வாறு விஜய் ஆறுதல் கூற சென்ற வீடுகளில் ஒன்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவர்களின் தங்கை வீடும் ஒன்று. தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் கணவரை இழந்த சில்வாவின் தங்கைக்கு விஜய் ஆறுதல் கூறியதற்கு சில்வா தனது சமூக வலைத்தளத்தில் நன்றி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச் சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று கூறியுள்ளார்.
எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச்சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் @actorvijay அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ????????
— silva stunt (@silvastunt) June 6, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments