தளபதி விஜய்க்கு ஸ்டண்ட் சில்வா கூறிய நன்றி

  • IndiaGlitz, [Wednesday,June 06 2018]

தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு ஆறுதல் கூறுவதாக சென்ற பலர் அந்த வருகையை தங்களுடைய சுயலாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தி கொண்டவர்களின் மத்தியில் எந்தவித ஆரவாரமும், விளம்பரமும் இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு தளபதி விஜய் ஆறுதல் கூறி வந்ததை திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

அவ்வாறு விஜய் ஆறுதல் கூற சென்ற வீடுகளில் ஒன்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவர்களின் தங்கை வீடும் ஒன்று. தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் கணவரை இழந்த சில்வாவின் தங்கைக்கு விஜய் ஆறுதல் கூறியதற்கு சில்வா தனது சமூக வலைத்தளத்தில் நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச் சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று கூறியுள்ளார்.

More News

சூர்யா படத்திற்காக இளமைக்கு மாறிய சூப்பர் ஸ்டார்

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யிடம் ரஜினி பாடம் கற்று கொள்ள வேண்டும்: இயக்குனர் அமீர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்குக் இரங்கலும், காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதலும் கூறிவிட்டு சென்னை திரும்பினார்.

'காலா' படம் பார்க்க சம்பளத்துடன் விடுமுறை அளித்த தனியார் நிறுவனம்

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 'கபாலி' படத்திற்கு பின்னர் அதே கூட்டணியில் வெளிவரும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்த காட்சி: வைரலாகும் வீடியோ

மும்பையில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறிய சிசிடிவி வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் 10 பெண்கள்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காத நிலையில் புதியதாக பொறுப்பேற்ற பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கினார்.