ஜெயம் ரவி படத்தில் அறிமுகமாகும் கோலிவுட் பிரபலத்தின் மகன்

  • IndiaGlitz, [Saturday,July 28 2018]

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ''டிக் டிக் டிக்' திரைப்படம் ஊடகங்களின் நல்ல வரவேற்பையும் அபாரமான வசூலையும் பெற்ற நிலையில் தற்போது அவர் அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் 'அடங்க மறு' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'தனி ஒருவன்', 'போகன்' படங்களை அடுத்து மீண்டும் போலீஸ் கேரக்டரில் இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வா அவர்களின் மகன் கெவின் அறிமுகமாகிறார். 18 வயதே நிரம்பிய கெவின், ஸ்டண்ட் யூனியன் சங்கத்தின் மிக இளைய உறுப்பினர் என்பதும், மிக இளம் வயதில் ஸ்டண்ட் இயக்குனர் பொறுப்பை ஏற்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் கராத்தே பிரிவுக்கு தகுதி பெற்றுள்ள கெவின், சிறுவயதில் இருந்தே புரூஸ்லீ, ஜாக்கிசான் படங்களை பார்த்து ஸ்டண்ட் மீதான ஆர்வம் கொண்டவர். ஸ்டண்ட் இயக்குனர் ஆகியிருப்பது குறித்து கெவின் கூறியபோது, 'நான் ஜெயம் ரவியின் தீவிர ரசிகன். இப்போது அவருடைய படத்திற்கே ஸ்டண்ட் அமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.