ஒரே நேரத்தில் மூன்று இரண்டாம் பாக படங்களில் பணிபுரியும் ஸ்டண்ட் சில்வா

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாக சீசன் கொடிகட்டி பறக்கின்றது. 2.0, விஸ்வரூபம் 2 முதல் மாரி 2 வரை சுமார் பத்து இரண்டாம் பாக திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் ரஜினியின் 2.0, விக்ரமின் 'சாமி 2' மற்றும் தனுஷின் 'மாரி 2' ஆகிய மூன்று இரண்டாம் பாக படங்களில் ஒரே நேரத்தில் பணிபுரிந்து வருகிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா.

இந்த படங்களின் அனுபவம் குறித்து ஸ்டண்ட் சில்வா கூறியபோது, 'இதுவரை பணிபுரிந்த படங்களில் ஸ்டண்ட் காட்சிகளுக்காக அதிக நாட்கள் பணிபுரிந்த படம் '2.0' என்று கூறிய சில்வா, இந்த படத்தின் படப்பிடிப்பில் எப்போதும் சுமார் 2500 பேர் இருப்பார்கள் என்றும் அவற்றில் 250 பேர் ஸ்டண்ட் நடிகர்கள் இருப்பார்கள் என்றும், இதிலிருந்து இந்த படத்தின் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்

அதேபோல் ஹரி மற்றும் விக்ரம் மீண்டும் இணைந்துள்ள 'சாமி 2' படத்தில் இதுவரை வெளிவராத வித்தியாசமான சண்டைக்காட்சிகள் இந்த படத்தில் தேவை என்ற சவாலை தனக்கு ஹரி, விக்ரம் இருவரும் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 'மாரி' படத்தின் ஹிட்டுக்கு அதிரடி ஸ்டண்ட் காட்சிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதால் இந்த படத்திலும் தனக்கு கடுமையான சவால் காத்திருப்பதாகவும் ஸ்டண்ட் சில்வா தெரிவித்துள்ளார்.

More News

வேலைக்காரனை சந்தித்த வேலாயுதம் - காரணம் என்ன ?

கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்'. இந்த படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன், மோகன்ராஜா ஆகியோர்களின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

ரூ.100 கோடி மதிப்பில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது.

நடிகை தேவயானிக்கு ஏற்பட்ட மிகப்பேரிய இழப்பு

பிரபல நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 73.

25 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சி

1992ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதே வருடத்தில் அவர் இசையமைத்த இன்னொரு படம் 'யோதா' என்ற மலையாள படம்.

நான் செல்லும் இடமெல்லாம் கோமியம் தெளிப்பீர்களா? பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

பிரகாஷ்ராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியால் அந்த மேடை புனிதத்தன்மையை இழந்துவிட்டதாக கருதிய பாஜகவினர் அந்த மேடையை கோமியம் ஊற்றி கழுவியதாக தெரியவந்துள்ளது.