கேரள வெள்ள நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கிய ஸ்டண்ட் இயக்குனர்
- IndiaGlitz, [Monday,August 27 2018]
சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் அம்மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் இன்னும் வீடுகளை இழந்து முகாம்களில் உள்ளனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி குவிந்து வருகிறது. கோலிவுட் திரையுலகினர்களும் லட்சக்கணக்கில் நிவாரண நிதியளித்து கேரள மக்களுக்கு கைகொடுத்து வருகின்றனர். அதிகபட்சமாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி கேரள முதல்வரிடம் சமீபத்தில் வெள்ள நிவாரண நிதியாக வழங்கினார்.
இந்த நிலையில் அஜித், விஜய் படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய ஸ்டண்ட் சில்வா, கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் அளித்துள்ளார்.