தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் போராடி வரும் அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தின் 100வது நாள் என்பதால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் போராட்டம் திடீரென கலவரமாக மாறியதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த ஒன்பது பேரில் பிரபல கோலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா அவர்களின் தங்கை கணவரும் ஒருவர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா தனது முகநூலில் கூறியதாவது:

என் தங்கையின் கணவர் ஆறுயிர் மாப்பிள்ளை J.செல்வராஜ் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டுக்கொல்லப்டார் . மிக்க வேதனையோடு பகிர்கிறேன்' என்று கூறியுள்ளார். ஸ்டண்ட் சில்வாவுக்கு கோலிவுட் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

இதைவிட கீழ்த்தரமான அரசாங்கத்தை பார்க்கவே முடியாது: கொந்தளித்த பியூஷ் மனுஷ்

இன்று நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஒட்டு மொத்த தமிழர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம தெரிவித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ்

வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்று நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான அப்பாவி பொதுமக்கள் 9 பேர்களின் மரணத்திற்கு

அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள்: பிரதமருக்கு விஷால் கோரிக்கை

இன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் கருத்து

தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துகுடி கலெக்டர் அலுவலகத்திற்குள் 144 தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை

துப்பாக்கி சூடு சரிதான்: எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது டுவிட்டரில் பதிவாகும் கருத்துக்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.