ரஜினியிடம் அதே வேகத்தை இப்போதும் பார்க்கின்றேன். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்
- IndiaGlitz, [Tuesday,October 04 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்து வருகிறது. தற்போது ரஜினிகாந்த் மற்றும் அக்சயகுமார் மோதும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இந்த ஆக்சன் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் 'ஸ்டண்ட் சில்வா' அமைத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா கூறியபோது, 'இயக்குனர் ஷங்கர் எனது காட்பாதர். அவர் தான் என்னை ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் செய்தார். மீண்டும் அவர் படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டமே.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி' படத்தில் பணிபுரியும்போது அவருடைய வேகம், ஸ்டைல், எனர்ஜி எப்படி இருந்ததோ அதில் கொஞ்சமும் குறையாமல் தற்போதும் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். மேலும் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இயக்குனர் திருப்தி அடையும் வரை எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுக்க அனுமதிப்பது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த சண்டைக்காட்சியை அடுத்து ரஜினிகாந்த், எமிஜாக்சன் நடிக்கும் ரொமான்ஸ் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.