விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த 'தளபதி 65' கலைஞர்கள்!

  • IndiaGlitz, [Thursday,March 04 2021]

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ’காடன்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான மோகன்தாஸ் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.

மோகன்தாஸ் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவ் இணைந்துள்ளனர். அன்பறிவ் சமீபத்தில்தான் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் ஸ்டண்ட் கலைஞர்கள் ஆக பணிபுரிய ஒப்பந்தம் ஆனார்கள் என்று வெளியான செய்தியை பார்த்தோம். இதனை அடுத்து தற்போது அதே கூட்டணி விஷ்ணு விஷாலின் ’மோகன்தாஸ்’ படத்திலும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். சுந்தரமூர்த்தி இசையில், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் கிருபாகரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

'மாஸ்டர்' படத்தின் மாஸ் புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் நேற்றுடன் 50நாட்கள் திரையரங்குகளில் நிறைவு செய்த நிலையில் 50வது நாளை 'மாஸ்டர்' படக்குழுவினர் கொண்டாடி வந்தனர் என்பது தெரிந்ததே

மகளைக் கொன்று, வெட்டப்பட்ட தலையோடு சாலையில் நடந்த தந்தை… நடந்தது என்ன?

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தந்தை ஒருவர் தன் மகள் காதலில் விழுந்ததால் அவரது தலையைத் துண்டித்து இருக்கிறார்.

குடிக்க தண்ணீர் கேட்ட சிறுமியை கொன்று புதைத்த கொடூரம்!

இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பதிவுகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது உத்திரப்பிரதேச மாநிலம்.

சாவை நீதிமன்றத்தில் வழக்காடி பெற்ற பெண்…. விசித்திரச் சம்பவம்!

பெரு நாட்டில் நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவர் தான் இறக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அந்த வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளார்

நம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்

எஸ்ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது