close
Choose your channels

வேற ஒரு அஜித்தை பார்க்கலாம்.. 'பில்லா'வுக்கு அப்புறம் இந்த படம் தான்.. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்..!

Wednesday, November 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தற்போது 'விடா முயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இரண்டு படங்கள் குறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விடா முயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக தாமதமாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இதுகுறித்து கூறியபோது, “இந்த படத்தின் தாமதத்திற்கு லொகேஷனே காரணம்; தட்பவெப்ப நிலை காரணமாக பல நாட்கள் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த படத்தில் நீங்கள் வேற லெவலில் ஒரு அஜித்தை பார்க்கலாம், இது ஒரு கொண்டாடப்படும் படமாக இருக்கும்” என்றும் கூறினார். “அஜித்தை ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் மகிழ் திருமேனி செதுக்கியுள்ளார், கதைக்கான விஷயத்தில் எந்த காம்ப்ரமைஸும் செய்யாமல் முழு ஈடுபாட்டுடன் படம் எடுக்கப்பட்டது” என்றும் கூறினார்.

“படப்பிடிப்பின் போது உண்மையாகவே விபத்து நடந்தது, ஆனால் அந்த விபத்தையும் ஆக்சன் ஆக மாற்றி மெருகேற்றுகிறோம்” என்றும் தெரிவித்தார். “கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும், மேலும் இது ஒரு மிகப்பெரிய படமாக அமையும்” என்றும் கூறினார்.

மேலும், ’குட் பேட் அக்லி’ திரைப்படம் ஒரு பக்கா கமர்ஷியல் படம், அஜித் நடித்த பில்லாவுக்கு பிறகு அவரை வேற ஒரு ஸ்டைலில் நீங்கள் பார்ப்பீர்கள்; நல்ல ஆக்சன் படம்” என்றும் அவர் கூறினார். சுப்ரீம் சுந்தர் பேட்டியில் இருந்து இந்த இரண்டு படமும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உள்ள படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment