'ஜெயிலர்' படத்திற்கு தியேட்டருக்கு லேட்டா வந்துராதீங்க.. மாஸ் சீனை மிஸ் பண்ணிடுவிங்க: சொன்னது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,July 16 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் யாரும் தியேட்டருக்கு லேட்டாக வந்துவிட வேண்டாம் என்றும் ஆரம்ப மாஸ் சீனை மிஸ் பண்ணி விடுவீர்கள் என்றும் இந்த படத்திற்கு ஸ்டாண்ட் மாஸ்டராக பணிபுரிந்த கெவின் தெரிவித்துள்ளார்.

அவர் சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் ’ஜெயிலர்’ திரைப்படம் பார்க்க தியேட்டருக்கு லேட்டாக செல்ல வேண்டாம் என்றும் தலைவருடைய மாஸ் சம்பவம் முதல் காட்சியில் இருந்து ஸ்டார்ட் ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு வெறித்தனமான விருந்தாக இருக்கும் என்றும் இயக்குனர் நெல்சன் மாஸ் திரைக்கதையை ரஜினிக்காக எழுதியுள்ளார் என்றும் இந்த படம் சூப்பர் ஸ்டாரின் அதகளமான ஆட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

‘கோலமாவு கோகிலா’ ’டாக்டர்’ போலவே இந்த படத்தின் திரைக்கதை சர்ப்ரைசாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவலை பார்க்கும்போது நெல்சன் ரஜினிக்காக ’ஜெயிலர்’ படத்தை மிகப்பெரிய சம்பவம் செய்து உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது.

ஸ்டண்ட் மாஸ்டர் கெவின் பிரபல சென்ட் மாஸ்டர் சிவா என்பவரின் மகன் என்பதும் கெவின் ஏற்கனவே என்.டி.ஆர் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ உள்பட ஒரு சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொடுத்த வாக்கு தான் முக்கியம்.. வியாபாரத்தில்  தோனி கடைபிடிக்கும் நேர்மை..!

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள 'எல்ஜிஎம்' என்ற படத்தின் வியாபாரத்தில் தோனி கடைப்பிடித்த நேர்மையை பார்த்து கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியமடைந்து வருகின்றனர்

பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், யோகார்ட் பிடிக்குமா? WHO வெளியிட்ட முக்கிய தகவல்!

உலகச் சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம் IARS முன்னதாக செயற்கை சர்க்கரை

கோடிக்கணக்கில் Bodyguard-க்கு சம்பளம் கொடுக்கும் சினிமா பிரபலங்கள்… யாரென்று தெரியுமா?

சினிமா என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது

ஒரே நேரத்தில் 2 வாலிபருடன் திருமணம்? விண்ணப்பித்த பெண்ணிற்கு செம டிவிஸ்ட்

கேரளாவில் வசித்துவரும் இளம்பெண் ஒருவர், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்பி சார்பதிவாளர் அலவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

சினிமாவில் 60 ஆயிரம் கோடி சொத்துகளை சம்பாதித்த இயக்குநர்? யாரென்று தெரியுமா?

ஹாலிவுட் சினிமாவில் ஹீரோக்கள் சிலர் 500 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கிய தகவல்களை அடிக்கடி பார்த்திருக்கிறோம்.