அஜித்துக்கு ஒரு எலும்பே எடுத்துட்டாங்க: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேட்டி!

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவரான கணல் கண்ணன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அஜித்துக்கு ஒரு எலும்பையே எடுத்து விட்டதாக கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

தல அஜித் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார் என்பதும் பல திரைப்படங்களில் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும்போது காயமடைந்து பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்பது தெரிந்தது

இந்த நிலையில் கனல் கண்ணனின் பேட்டியில் அஜித்துக்கு டாக்டர்கள் ஒரு எலும்பையே எடுத்துவிட்டார்கள் என்றும், அதோடுதான் அவர் உயிர் வாழ்ந்து வருகிறார் என்றும், கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும் ஹீரோக்களுக்கும் பல ரிஸ்குகள், கஷ்டங்கள் இருப்பதாகவும் கனல் கண்ணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ரஜினி, விஜய், சூர்யா, விஷால் ஆகியோர்களின் அர்ப்பணிப்பு தன்மை குறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ: