close
Choose your channels

'தெறி'யின் 7 தத்ரூபமான சண்டைக்காட்சிகள். திலீப் சுப்பராயன்

Thursday, February 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் ஒரு போலீஸ் படம் என்பதும் இந்த படத்தில் விஜய்குமார் ஐ.பி.எஸ் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. போலீஸ் படம் என்றால் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகளவு இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் மொத்தம் 7 சண்டைக்காட்சிகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் கூறியபோது, இந்த படத்தில் உள்ள 7 சண்டைக்காட்சிகளும் படத்தின் கதையோடு ஒன்றி இருப்பதாகவும், உயரத்தில் இருந்து குதிப்பது போன்றோ, ரோப் கட்டி பறந்து அடிப்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட சண்டைக்காட்சிகள் இல்லை என்றும், மிகவும் தத்ரூபமாக டூப் இல்லாமல் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த சண்டைக்காட்சிகளை பார்த்து விஜய் வியந்து ஸ்டண்ட் நடிகர்களை பாராட்டியதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், மீனா மகள் நைனிகா, விஜய் மகள் திவ்யா, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.