கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் வேற லெவல்.. 'ஜெயிலர்' படம் குறித்து பிரபலம்..!

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வேற லெவலில் வந்துள்ளது என இந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் உள்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த ஸ்டண்ட் சில்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது, அவர் மிகவும் ஆக்டிவ்வாக இந்த படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகள் வேற லெவலில் வந்துள்ளது, படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.,

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.