பிறந்தநாளில் நடிகர் அருண்விஜய் செய்த அசத்தலான காரியம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

நடிகர் அருண்விஜய் நேற்று தனது 44 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவருடைய ரசிகர்கள் சார்பில் நேற்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடத்தினர். இதையறிந்த அருண்விஜய் உடனே தானும் அந்த ரத்ததான முகாமில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கின்றன.

பிரபல நடிகரான விஜய்குமாரின் மகன் அருண்விஜய் என்பது நமக்குத் தெரிந்ததுதான். பிரபலத்தின் மகன் என்ற முறையில் கடந்த 1994 ஆம் ஆண்டு திரைத்துறையில் எளிதாக அறிமுகமான இவர், பின்னர் கடும் போராட்டத்திற்கு இடையே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தல அஜித்துடன் இணைந்து வில்லனாக நடித்த “என்னை அறிந்தால்“ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அருண்விஜய் “குற்றம் 23“, “தடம்“, “செக்கசிவந்த வானம்“ போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். தற்போது பிரபல இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் “யானை“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் “அக்னி சிறகுகள்“, “பாக்சர்“, “சினம்“, “பார்டர்“ எனப் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அருண்விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து ரத்ததானம் செய்த விஷயம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.