close
Choose your channels

பா ரஞ்சித் - விக்ரமின் 'தங்கலான்' : சூப்பர் அப்டேட் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன்..!

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த ‘தங்கலான்’ திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்டை இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பாக கோலார் தங்க வயலில் ஒரு நீண்ட படப்பிடிப்பு நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் பணிக்கு விக்ரம் சென்று விட்டதால் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரோமோஷன் பணிகள் முடிபடைந்து படமும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த தகவலை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இன்று முதல் ‘தங்கலான்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment