மும்பையில் திறக்கப்பட்ட தமிழ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம்.. சிவகுமார், சூர்யா பங்கேற்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் திரைப்பட நிறுவனத்தின் கிளை மும்பையில் திறக்கப்பட்ட நிலையில் இந்த திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர் சூர்யா கலந்து கொண்ட கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் என்பதும் இந்நிறுவனம் தற்போது ’வா வாத்தியாரே’ ’தங்கலான்’ மற்றும் ’கங்குவா’ ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை சென்னையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் கிளை தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து மும்பை அலுவலக திறப்பு விழாவில் நடிகர்கள் சிவகுமார் மற்றும் சூர்யா கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கிளை மும்பையில் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பாலிவுட் திரைப்படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Veteran Actor Sivakumar Ayya & Actor Suriya Anna visited and inaugurated Our Studio Green Mumbai office ❤️ & Wished for our #Bollywood projects ❤️😊🙏
— Studio Green (@StudioGreen2) February 19, 2024
Thanks #Sivakumar Ayya ❤️😊🙏and @Suriya_offl Anna ❤️😊🙏
A #StudioGreen #KEGnanavelRaja Production ❤️😊 pic.twitter.com/IlPC4VlobB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com