ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஸ்டுடியோக்ரீன் நிறுவனம்.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் புரமோஷன் பணிகள் எதுவும் தொடங்காததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதம் காரணமாக ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் பற்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் சரியான ரிலீஸ் செய்தியை அறிவிப்போம் என்றும் காலதாமதத்திற்கு வருத்தப்படுகிறோம் என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
சமையல் கலை வல்லுநராக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள இந்த படம் ராதான் இசையில் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் அனுஷ்காவின் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We apologize from the bottom of our hearts for this unforeseen delays.
— Studio Green (@StudioGreen2) July 29, 2023
We will soon be serving #MissShettyMrPolishetty, a comedic feast, with a side of laughter...
Stay tuned for the New release date and trailer...@UV_Creations pic.twitter.com/l5wDDwoFTQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com