ஒருவழியாக வந்தது 'கங்குவா' படத்தின் டீசர் அப்டேட்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த டீசர் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. தமிழ் உள்பட 10 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இதுதான் பெரிய பட்ஜெட் படம் என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியாக இருந்த நிலையில் அவ்வப்போது சில தடைகள் ஏற்பட்டதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது நாளை மாலை 4:30 மணி ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதளத்தை பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில் ‘கங்குவா’ படத்தின் டீசரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கண்டிப்பாக இந்த டீசர் மிரட்டும் வகையில் இருக்கும் என்றும் அதே நேரத்தில் இந்த டீசரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
Prepare for a phenomenon!#Kanguva set to ignite your personal screens🔥
— Studio Green (@StudioGreen2) March 18, 2024
A Sizzle Teaser dropping tomorrow, at 4:30 PM#KanguvaSizzle 🦅@Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP @GnanavelrajaKe @UV_Creations @KvnProductions @PenMovies @NehaGnanavel…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com