கமல்-ரஜினி அரசியலில் கார்ப்பரேட் பிரமுகர்கள்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். அதேபோல் மிக விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ளார்.

இந்த நிலையில் கமல், ரஜினி ஆகிய இருவரது அரசியல் கட்சிகளிலும் கார்ப்பரேட் அதிகாரிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். ஏற்கனவே லைகா நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்த ராஜூ மகாலிங்கம் அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் விஜய் டிவி மகேந்திரன் இணைந்துள்ளார். இவருக்கு கட்சியில் விரைவில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்கி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ரஜினி, கமல் தங்கள் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது பொதுமக்களுக்கு ஒருசிறிய தயக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவர்களது எதிர்கால செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கனடா பிரதமரை வாழ்த்தி வரவேற்ற ஆஸ்கார் நாயகன்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினர்களுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நீங்க நிம்மதியா இருக்கிங்களா? அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்க: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் தீவிர முயற்சியில் உள்ளார்.

இன்று உலகமே ஒரு தமிழனை பார்த்து தலைநிமிர்ந்த நாள் தெரியுமா?

ஆஸ்கார் விருது என்பது பொதுவாக இந்திய கலைஞர்களுக்கு ஒரு எட்டாத கனியாகத்தான் இருந்தது. சத்யஜித்ரே போன்ற ஒருசிலர் மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளனர்.

வைரலாகும் விஜய்யின் செயல்

ஒவ்வொரு பெரிய நடிகரின் ரசிகர்களும், தங்களுடைய அன்புக்குரிய நடிகரை நேரில் பார்க்கும்போது பெரிய மாலையை அவரது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வழக்கம் உண்டு.

மாரி-2 நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்த நடிகை: வைரலாகும் வீடியோ

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இணைந்துள்ளார்