கமல்-ரஜினி அரசியலில் கார்ப்பரேட் பிரமுகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். அதேபோல் மிக விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் கமல், ரஜினி ஆகிய இருவரது அரசியல் கட்சிகளிலும் கார்ப்பரேட் அதிகாரிகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். ஏற்கனவே லைகா நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்த ராஜூ மகாலிங்கம் அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் விஜய் டிவி மகேந்திரன் இணைந்துள்ளார். இவருக்கு கட்சியில் விரைவில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்கி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ரஜினி, கமல் தங்கள் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது பொதுமக்களுக்கு ஒருசிறிய தயக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவர்களது எதிர்கால செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout