குடியரசு தினம் கருப்பு தினமாக மாறும். மாணவர்கள் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த போராடிய இளைஞர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அலங்காநல்லூரில் கைது செய்த இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், 'இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் வரும் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்' என்று கோஷமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 8-ம் தேதி மெரீனாவில் இளைஞர்கள் பெரும் திரளாக ஒன்று கூடி போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் பெருமளவு அதே இடத்தில் கூடி இளைஞர்கள், மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

More News

சூர்யாவின் 'எஸ் 3' டைட்டில் திடீர் மாற்றம்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா தினத்தில் வெளியாகவுள்ளது.

த்ரிஷாவின் அதிரடியை பின்பற்றிய விஷால்...

சமீபத்தில் பீட்டா மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக விரும்பத்தகாத விமர்சனங்கள் காரணமாக நடிகை த்ரிஷா சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறினார் என்பதை பார்த்தோம்

எம்.ஜி.ஆருக்கு நடிகர் சரத்குமார் புகழாரம்

கோலிவுட் திரையுலகினர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.ஜி.ஆருக்கு அறிக்கை ஒன்றின்மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது...

மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல காமெடி நடிகர்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

எம்.ஜி.ஆர் 100வது பிறந்த நாளில் நடிகர் சங்க உறுப்பினர்களின் மரியாதை

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100வது பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் அபிமானிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது...