வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி மாணவ, மாணவிகள் போராட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி பல நல்ல விஷயங்களுக்கு வழிகாட்டியாக அமைந்து வருகிறது. தங்களுக்காக உண்மையாக போராட ஒரு கூட்டம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கிய பீட்டாவுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் குளிர்பானங்களில் ஒன்றுகூட வெளிநாட்டு குளிர்பானம் இல்லை என்பதே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
மேலும் பூச்சிமருந்து கலந்த வெளிநாட்டு பானங்களை இனிமேல் விற்பனை செய்ய மாட்டோம் என்று பல வணிகர்கள் சூளுரைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் அன்னிய நாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏற்பட்டு இந்தியாவை விட்டே வெளிநாட்டு பான நிறுவனங்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com