மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… சிக்கியது மேலும் 3 தனியார் பள்ளிகள்!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சென்னை பத்மா ஷேசாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தற்போது விஷ்வரூபம் எடுத்து இருக்கும் நிலையில் இதேபோன்ற புகார்களால் சென்னையில் உள்ள மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்மா ஷேசாத்திரி போலவே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது சில முன்னாள் மாணவிகள் மின்னஞ்சல்கள் மூலம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மற்றும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர்.

மேலும் செனாய் நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் தளாளர், அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இதுதொடர்பான விசாரணைக்கு தமிழ்நாடு உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மம் அனுப்பி உள்ளது.

சென்னையில் இதுபோன்ற பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களைக் குறித்து புகார் அளிக்க 9444772222 என்ற அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படி பெறப்படும் புகார்களை சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஆணையம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு புகார் அளிக்கும் மாணவிகளின் ரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் துணை கமிஷனர் ஜெயலட்சுமி உறுதி அளித்து உள்ளார்.