மனிதக்கடவுளுக்கே எங்கள் ஓட்டு: 'பிகில்' பாணியில் முதல்வருக்கு மாணவர்களின் முழுபக்க விளம்பரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தேர்வு கட்டணம் கட்டியுள்ள அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் அறிவித்திருந்தார்

இதனால் அரியர்கள் வைத்திருந்த பல மாணவர்களும் பாஸ் ஆகி உள்ளனர். இதனை அடுத்து மாணவர்கள் தமிழக முதல்வருக்கு போஸ்டர் ஒட்டியும், கட் அவுட் வைத்தும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தமிழ் செய்தித்தாள் ஒன்றில் முழுப்பக்க விளம்பரம் ஒன்றை தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது

இந்த விளம்பரத்தில் தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் பாணியில் லட்சக்கணக்கான மாணவர்கள் கைகோர்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் ’மாணவர்களின் மனித கடவுளே’ எங்கள் ஓட்டு உங்களுக்கே’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லட்சக்கணக்கில் மாணவர்களின் ஓட்டு இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ஒரே ஒரு அறிவிப்பால் ஒட்டுமொத்த மாணவர்களையும் கவர்ந்துள்ளது எதிர்க் கட்சிகளுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

நாடு திரும்புகிறார் முன்னணி சிஎஸ்கே வீரர்: ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியதாக தகவல்!

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும்

தென்கொரிய விமான நிலையத்தில் திடீரெனச் சுருண்டு விழுந்து இறந்த இந்திய மாணவி- பரபரப்பு தகவல்!!!

தென்கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்துவரும் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தென்கொரிய விமான நிலையத்தில் திடீரென சுருண்டு விழுந்து

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறி ஆடு!!!

அரியவகை செம்மறி ஆடு ஒன்று இந்திய மதிப்பில் ரூ.3.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது

சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினி முருகன்' மற்றும் 'சீமராஜா' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பொன்ராம்.

மைக்ரோசாப்டின் சிறந்த கல்வியாளராகத் தேர்வுசெய்யப்பட்ட நம்ம ஊர் அரசு பள்ளி ஆசிரியர்!!!

தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பாக சிறந்த கல்வியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.