ஜல்லிக்கட்டு போராளிகளின் 3 கோரிக்கைகள். தமிழக அரசு ஏற்குமா?

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் கூடி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் போராட்டம் செய்து வரும் இளைஞர்கள் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு;
1. காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும்
2. தமிழக எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து அவசர சட்டம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும்
3. தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
இந்த மூன்று கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா? ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நாம யாருங்கிறதை காட்டுவோம். சிம்புவின் அதிரடி திட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிம்பு

அரசுக்கு 3 நாள் கெடு. ரேசன் கார்டு, ஆதார் அட்டை திருப்பி அளிக்கப்படும். இளைஞர்கள் ஆவேசம்

ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்கள் பட்டாளம் மெரீனாவில் நேற்று காலை முதல் குவிந்துள்ளது

இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். சீயான் விக்ரம் வாழ்த்து

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இளைஞர்களும் நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு குவியும் ஆதரவு. இளைஞர்கள் எழுச்சி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைதானவர்களை விடுவிக்க கோரியும் இன்று காலை குறைந்த எண்ணிக்கையுள்ள இளைஞர்களால் தொடங்கப்பட்ட மெரினா போராட்டம் நேரம் ஆக ஆக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளால் தற்போது மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் அளவுக்கு கூட்டம் பெருகி உள்ளது...

பீட்டாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விஜய்யின் வீடியோ செய்தி

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில்...