கேர்ள் பிரண்ட் சவாலை நிறைவேற்ற பர்தா அணிந்த சென்னை மாணவருக்கு தர்ம அடி!
- IndiaGlitz, [Thursday,February 21 2019]
சென்னை மாணவர் ஒருவர் தனது கேர்ள் பிர்ண்ட் சவாலை நிறைவேற்றும் வகையில் பர்தா அணிந்து சென்றதால் பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கியதோடு தற்போது காவல்துறையினர்களின் விசாரணையில் உள்ளார்.
சென்னை ஐஐடியில் படித்து வரும் 22 வயது மாணவர் சக்திவேல் என்பவர் தனது கேர்ள் பிரண்ட் விடுத்த சவாலான ராயப்பேட்டை முதல் மெரினா பீச் வரை பர்தா அணிந்து வரவேண்டும் என்ற சவாலை ஏற்றார். இந்த சவாலில் அவர் வெற்றி பெற்றால் முத்தம் தருவதாக கேர்ள் பிரண்ட் வாக்குறுதி கொடுத்திருந்தாரம்
இதன்படி சவாலை நிறைவேற்ற சக்திவேல் ராயபேட்டையில் இருந்து மெரினா கடற்கரைக்கு பா்தா அணிந்து சென்றுகொண்டிருந்தபோது ஐஸ் ஹவுஸ் பகுதி அருகே அவரை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
ஒருகட்டத்தில் பொதுமக்களை சமாளிக்க முடியாத சக்திவேல் பர்தாவை நீக்கினார். பர்தா அணிந்து வந்தது ஒரு ஆண் என்பது தெரிந்ததும் கூடியிருந்த மக்கள் அவரை சரமாரியாக தர்ம் அடி கொடுத்ததுடன் அவரை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல்துறையினர் இதுகுறித்து சக்திவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர்.