'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று அந்த பெண்ணின் பெற்றோர் பெயர் வைத்தனர். ஆனால் இந்த பெண்ணை தற்போது ஜப்பான் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு அழைத்துள்ளது
திருத்தணி அருகே உள்ள நாராயணபுரம் என்ற கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு 'வேண்டாம்' என்று பெயர் வைத்துவிட்டால் அடுத்த குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வாறு 'வேண்டாம்' என்று பெயர் வைக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை பள்ளிப்படிப்பை சக தோழிகளிலும் கேலி, கிண்டல்களுக்கு நடுவே முடித்தார்.
அதனையடுத்து இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படித்து வரும் மாணவி 'வேண்டாம்', சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொண்டார். அவரது திறமையை பார்த்த ஜப்பான் நிறுவனம் ஒன்று அவரை ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து கொண்டது. இஞ்சினியரிங் படிப்பு முடிந்தவுடன் 'வேண்டாம்' ஜப்பானுக்கு செல்லவுள்ளார். பெற்றோர் 'வேண்டாம்' என்று பெயர் வைத்தாலும் ஜப்பான் நிறுவனம் அவரை வேண்டும் என்று கூறி வேலைக்கு எடுத்துள்ளது
இதுகுறித்து பேட்டி அளித்த மாணவி 'வேண்டாம்', தன்னைப்போலவே இதே பெயருடன் தனது கிராமத்தில் பல பெண்கள் இருப்பதாகவும், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout