ரயில் மறியல் செய்யும் மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரியின் அன்பு எச்சரிக்கை
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
ஜல்லிக்கட்டு போராட்டம் அல்ங்காநல்லூர், சென்னை மெரீனா மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. மேலும் ஒருசில இளைஞர்கள், மாணவர்கள் ரயில் மறியல் செய்தும், ரயிலின் மேற்கூரை மேல் ஏறியும் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் மறியும் செய்யும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ரயில்வே காவல்துறை உயரதிகாரி P.விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் ஒரு அன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் ரயிலில் போராட வேண்டாம் என்றும் குறிப்பாக ரயில் படிக்கட்டுக்களிலும், ரயிலின் மேற்கூரையிலும் பயணம் செய்வது பலத்த காயத்தையோ அல்லது உயிரிழக்கும் ஆபத்தையோ ஏற்படுத்தும் என்றும், ரயிலின் மேலுள்ள மின்சார கம்பி 25000 வோல்ட் மின்சாரம் செல்லக்கூடியது என்பதால் மிகவும் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை அல்லது இந்த செய்தியை பார்க்கும் மாணவர்கள் கவனத்துடன் தங்கள் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.