ரயில் மறியல் செய்யும் மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரியின் அன்பு எச்சரிக்கை

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

ஜல்லிக்கட்டு போராட்டம் அல்ங்காநல்லூர், சென்னை மெரீனா மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. மேலும் ஒருசில இளைஞர்கள், மாணவர்கள் ரயில் மறியல் செய்தும், ரயிலின் மேற்கூரை மேல் ஏறியும் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் மறியும் செய்யும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ரயில்வே காவல்துறை உயரதிகாரி P.விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் ஒரு அன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் ரயிலில் போராட வேண்டாம் என்றும் குறிப்பாக ரயில் படிக்கட்டுக்களிலும், ரயிலின் மேற்கூரையிலும் பயணம் செய்வது பலத்த காயத்தையோ அல்லது உயிரிழக்கும் ஆபத்தையோ ஏற்படுத்தும் என்றும், ரயிலின் மேலுள்ள மின்சார கம்பி 25000 வோல்ட் மின்சாரம் செல்லக்கூடியது என்பதால் மிகவும் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை அல்லது இந்த செய்தியை பார்க்கும் மாணவர்கள் கவனத்துடன் தங்கள் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More News

ஜல்லிக்கட்டை காப்பாற்ற கைகோர்ப்போம், ஜெயிப்போம். கீர்த்திசுரேஷ்

தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார, பண்பாடான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை காப்பாற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராது, கடுங்குளிரில் கடந்த மூன்று நாட்களாக சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.

டெல்லியில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்பாதது ஏன்? புதிய தகவல்

இந்நிலையில் இன்று மாலை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இன்னும் திரும்பவில்லை. டெல்லியில் முதல்வர் ஓபிஎஸ் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் ஜல்லிக்கட்டை உடனே நடத்த தமிழக அரசே அவசர சட்டம் இயற்றக்கூடிய வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது...

இனி நாங்கள் இந்தியர் இல்லை. மெரினாவில் தூக்கி எறியப்பட்ட ஆதார் அட்டைகள்

தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க போராடி வரும் இளைஞர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபணம் செய்து வருகிறது...

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தரத்தயார். பிரபல நடிகர்

ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்ய கோரியும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். ஏ.ஆர்.ரஹ்மான்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை ஒருநாள் மெளன அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர்...