சிவகார்த்திகேயன் உதவியால் நனவான கனவு: மருத்துவ மாணவி நெகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் குடும்ப வறுமையால் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற தனது கனவு கலைந்து விடுமோ என அஞ்சி இருந்தார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது உதவியாளரை அனுப்பி அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய ஒப்புக் கொண்டதாகவும் எனவே மனம் தளராமல் நீட் தேர்வுக்கு படிக்கும்படி அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியானது.
அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் சிவகார்த்திகேயன், மாணவி சஹானாவை படிக்க வைத்ததாகவும் தங்கும் செலவு உணவு கோச்சிங் சென்டருக்கான கட்டணம் அனைத்தையும் அவர் செலுத்தியதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டியளித்த மாணவி சஹானா, ‘என் மேல் நம்பிக்கை வைத்து சிவகார்த்திகேயன் அண்ணன் செய்து கொடுக்கும் இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று தீவிரமாக படித்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி சஹானாவுக்கு தற்போது தமிழக அரசின் 7% உள் ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ள மாணவி சஹானா நெகிழ்ச்சியுடன், ‘உள் ஒதுக்கீட்டில் தற்போது எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துவிட்டது. எனது மருத்துவ கனவு நனவாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவும் பெருமை நிறைந்த ஒன்றாகவும் உள்ளது என்றும், சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்
மின்சார வசதிகூட இல்லாமல் குடிசையில் வாழ்ந்து வந்த சஹானாவுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு இருந்த நிலையில், அந்த கனவு தற்போது சிவகார்த்திகேயன் உதவியாலும், அவரது தீவிர முயற்சியினாலும் நனவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments