'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..? மாணவியின் கோரிக்கையை மேடையிலேயே நிறைவேற்றிய விஜய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மக்கள் இயக்கத்தின் கல்வி விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பரிசு வாங்க வந்த மாணவி ஒருவர் வேண்டுகோளை மேடையில் விஜய் நிறைவேற்றி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விழா இன்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி அவர் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் ஒரு மாணவி சான்றிதழ் வாங்க வரும்போது, ஓரிரு வார்த்தைகள் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே அவரது அவரது கையில் விஜய் மைக் கொடுத்தவுடன் அந்த மாணவி பேசிய போது ’உங்களுடைய படம் அனைத்தையும் நான் பார்ப்பேன், ஒவ்வொரு அப்டேட்டையும் எதிர்பார்த்து காத்திருப்பேன், உங்கள் படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும், ஆனால் உங்கள் படம் வெளியானவுடன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். நீங்கள் அந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு எல்லாம் உங்களுடைய படத்தின் வெற்றியின் மூலமே பதிலடி கொடுத்திருப்பீர்கள். அப்போது எனக்கு பாரதியாரின் ஒரு கவிதை ஞாபகம் வருகிறது, ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று கூறினார்.
இதனை அடுத்து அந்த மாணவி விஜய்யிடம் வைத்த வேண்டுகோளில் ’எனது வெற்றிக்கு காரணம் எனது அப்பா அம்மா தான், எனவே அவர்களுக்கும் பொன்னாடை போர்த்த முடியுமா என்று கேட்டார். உடனே இரண்டு பொன்னாடைகளை எடுத்து அந்த மாணவியின் தாயாருக்கும் தந்தைக்கும் விஜய் விஜய் போர்த்திவிட்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
#Watch | கல்வி விருது விழாவில் மாணவி வைத்த கோரிக்கையை மேடையிலேயே நிறைவேற்றிய நடிகர் விஜய்!#SunNews | #VijayHonorsStudents | #ActorVijay | @actorvijay pic.twitter.com/fGyeqUZc53
— Sun News (@sunnewstamil) June 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments