விஜய் கொடுக்காவிட்டாலும் தரவரிசை பட்டியல் கொடுத்தது.. மாணவி நேத்ராவின் சாதனை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டது என்பதும், கிட்டத்தட்ட 1500 மாணவ மாணவிகளுக்கு விஜய்யே நேரில் பரிசளித்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நேத்ரா 600க்கு 598 மதிப்பெண் பெற்ற நிலையில் அவரது பெயர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் குளறுபடி காரணமாக பரிசு வாங்கும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இதனை அடுத்து சென்னை வந்த மாணவி நேத்ரா மற்றும் அவரது தாயார் விஜய் மக்கள் நிர்வாக இயக்கத்தின் நிர்வாகிகளிடம் முறையிட்ட போது விரைவில் விஜய் வீட்டுக்கு சென்று பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்திலேயே முதல் மாணவியாக மாணவி நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மக்கள் இயக்கத்தின் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு தரவரிசை பட்டியல் முதல் இடம் கிடைத்ததை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments