கமல் வீட்டு முன் திடீர் போராட்டம்: மாணவர்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்க்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசனையும், அதில் பங்கேற்று உள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் சமீபத்தில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர் என்பதை பார்த்தோம்
இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று முன் தினம் இரவு பத்திரிகையாளர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும், சமூகத்திற்கு இந்த நிகழ்ச்சி என்ன சொல்ல வருகிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும், ஒருசில மாணவர்களும் கமல் வீட்டு முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதால் இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் ஆழ்வார்ப்பேட்டை கமல் வீடு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டத்தினால் கமல் வீட்டுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் காவல்துறையினர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

More News

அஜித் என்றாலே 'கெத்து' என்று தான் அர்த்தம்: சிறுத்தை சிவா பெருமிதம்

தல அஜித் படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கிடைத்தாலே புதையல் கிடைத்தது மாதிரி இருக்கும் நிலையில் அவருடைய மூன்று படங்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு பெற்றவர் இயக்குனர் சிவா...

நான் அஜித்தை காப்பி அடிப்பேன்! இயக்குனர் சிவா

'விவேகம்' படத்தின் இயக்குனர் சிவா, அஜித்தின் பட இயக்குனர் என்பதையும் தாண்டி அவருடைய சிறந்த நண்பர்களில் ஒருவராக உள்ளார்.

2009-2014 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு பாகம் 2

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று ஆறு ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2009-2014 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு பாகம் 1

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று ஆறு ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு

சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவர் நடிப்பில் இருந்தே விலகவிருப்பதாகவும், இயக்கம், இசையமைப்பு என வேறு துறைகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் சமூக இணையதளங்களில் வதந்திகள் உலாவி வருகின்றது...