திருமணமான ஆசிரியையுடன் 16 வயது மாணவன் கள்ளக்காதல்:
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பகவான் என்ற ஆசிரியரால் ஆசிரியர் வர்க்கமே பெருமை அடைந்தது. ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரை உலகமே போற்றியது. இந்த நிலையில் பகவான் போன்ற ஆசிரியர்கள் இருக்கும் இடத்தில் ஆசிரியை ஒருவர் அந்த தொழிலுக்கே இழுக்கு ஏற்படும் வகையில் கள்ளக்காதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரியா என்ற ஆசிரியையைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரவி என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. ரவி பெங்களூரில் பணிபுரிவதால் இருவரும் பெங்களூரில் வசித்து வருகின்றனர். பிரியா ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வீட்டிலும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் டியூஷன் படிக்க வந்த 16 வயது மாணவர் ஒருவருக்கும் பிரியாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் ஒருகட்டத்தில் திடீரென இருவரும் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியாவின் கணவர் ரவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் பிரியாவும் மாணவரும் மைசூரில் குடும்பம் நடத்தி வந்ததை கண்டுபிடித்து பிரியாவை அவரது கணவரிடமும், மாணவரை அவரது பெற்றோரிடமும் ஒப்படைத்தனர்,
இந்த நிலையில் பிரியாவுடன் மீண்டும் அந்த மாணவர் கள்ளக்காதலை தொடரந்ததால், பிரியாவை அவருடைய தாயார் வீட்டுக்கு ரவி அனுப்பிவிட்டார். இதனையறிந்த அந்த மாணவர் பிரியாவின் பெற்றோர் வீட்டுக்கு சென்று பிரியா தன்னுடன் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியாவின் உறவினர்கள் அந்த மாணவனை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இருப்பினும் பிரியா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று அந்த மாணவர் புலம்பி வருகிறாராம். அவருக்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com