நான் பயங்கரக் கடுப்பில் இருக்கிறேன் - இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து !!! விஷயம் என்னனு தெரியுமா???
- IndiaGlitz, [Saturday,July 11 2020] Sports News
இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணிக்ககும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் முதல் டெஸ்ட் போட்டி ஜுலை 8 ஆம் தேதி தொடங்கியது. இந்த முதல் போட்டியில் இங்கிலாந்தில் முக்கிய பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் தேர்ந்தெடுக்கப் படவில்லை. உத்தி ரீதியான காரணங்களுக்காக அவர் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்ற காரணத்தை தேர்வுக்குழு தெரிவித்து இருக்கிறது. தான் தேர்ந்தெடுக்கப் படாததற்கு முறையான காரணத்தைத் தெரிவிக்குமாறு தற்போது பிராட் காட்டம் தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டூவர்ட் பிராட் நான் கடந்த இரண்டு வருடங்களாக நன்றாகவே பந்து வீசினேன். முதல் டெஸ்ட் போட்டியில் என்னைத் தேர்ந்தெடுக்காததற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் ஏமாற்ற மடைந்துள்ளேன். இது ஏமாற்றம் என்று கூட சொல்ல முடியாது. பயங்கர வெறுப்பில் இருக்கிறேன் எனத் தெரிவித்து உள்ளார். போட்டிக்கான தேர்வுக்குழு தலைவர் எட் ஸ்மித்திடம் இவர் பேசியதாகவும் அதற்கு ஸ்மித் 13 வீரர்களை தேர்ந்தெடுப்பது மட்டுமே என்னுடைய பணி என்று அவர் பதில் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணிக்காக 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் இங்கிலாந்து அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்து இருக்கிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான போட்டியில் முதல் அணியில் இடம்பெறாதது குறித்து தான் மிகவும் வெறுப்படைந்து இருப்பதாக பிராட் தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய எதிர்காலத்தைக் குறித்தும் கவலை அடைந்துள்ளதாக கூறியிருக்கிறார்.
ஆஷ்ஸ் தொடரில் இவருடைய பங்கு மிகவும் குறிப்பிடத் தகுந்தது எனக் கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றதிலும் இவருக்கு அதிக பங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான போட்டியில் இடம்பெறாதது குறித்து எனக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களுக்குத் தகுதியில்லை என்று சொல்லவில்லை. என்னைப் போலவே கிறிஸ் வோக்ஸ், சாம்கரன் போன்றோர் மிகவும் திறமையான பந்தை வீசி வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.