நேரடி ஒளிபரப்பில் பெண் ரிப்போர்ட்டரின் பெல்ட்டை உருவிய பூனை: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேரடி ஒளிபரப்பில் பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் செய்திகளை தந்து கொண்டிருந்த போது அவரது கோட்டில் உள்ள பெல்ட்டை உருவ பூனை ஒன்று முயற்சித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
ஸ்கை நியூஸ் அரேபியா என்ற ஊடகத்தின் சீனியர் பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் விசாரணை குறித்த செய்தியை நேரடி ஒளிபரப்பில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் வந்த பூனை ஒன்று அவர் அணிந்திருந்த கோட்டில் உள்ள பெல்டை உருவ முயற்சித்துக் கொண்டிருந்தது. அந்த பெண் ரிப்போர்ட்டர் அதனை தெரிந்து கொண்டாலும், பூனையை கவனிக்காமல் அவர் தனது செய்தியை தருவதில் மும்முரமாக இருந்தார். செய்தியைக் கூறி முடித்த பின்னர் கேமரா ஆப் செய்தவுடன் தான் பூனையை அவர் சிரித்துக்கொண்டே பார்த்தார் என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்த வீடியோவை அந்த பெண் ரிப்போர்ட்டர் தனது டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
My most loyal follower ... ?????? pic.twitter.com/2vS6a4i4fq
— Larissa Aoun (@LarissaAounSky) December 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com