வானத்தில் இன்று இரவு தோன்றும் ஸ்ட்ராபெரி சந்திரக் கிரகணம்!!! எப்போது பார்க்க முடியும் தெரியுமா???
- IndiaGlitz, [Friday,June 05 2020]
பொதுவாக சந்திக்கிரகணம், சூரியக் கிரகணம் என்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, பொது மக்களையும் சுவாரசியத்திற்குள் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு. இந்தாண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று இரவு நடக்க விருக்கிறது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு இந்த சந்திரக் கிரகணம் நடைபெற இருக்கிறது. ஜுன் 5 ஆம் தேதிக்கும் ஜுன் 6 ஆம் தேதிக்கும் இடையில் சரியாக இந்திய நேரப்படி இரவு 11.15 இருந்து 12.45 மணிக்கு இந்தக் கிரகணத்தைப் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் 12.45 மணிக்கு இந்த நிகழ்வை மிகவும் அழகாக கண்டு களிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சூரிய ஒளியை சந்திரன் மீது பாடாமல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி சென்று மறைத்துக் கொள்வதைத்தான் சந்திரக் கிரகணம் எனச் சொல்கிறோம். பூமி இடையில் செல்லும்போது சந்திரனிடம் இருந்து வரும் ஒளி நிறுத்தப்படுகிறது. தற்போது நிகழவிருக்கும் இந்த அற்புதக் காட்சியை விஞ்ஞானிகள் Penumbral lunar Eclipse எனக் குறிப்பிடுகின்றனர். சந்திரனின் ஒளியானது முற்றிலும் இருட்டாக இருப்பதால் மேலும் இந்நிகழ்விற்கு ஸ்ட்ராபெரி மூன் கிரகணம் எனவும் கூறப்படுகிறது. ஸ்ட்ராபெரி மூன் என்று சொன்னவுடனே நிலா மிகவும் சிவப்பாக இருக்கும் எனப் பெரும்பாலும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் சந்திரன் இருட்டாக இருக்கும் நிகழ்விற்குத்தான் நம்முடைய விஞ்ஞானிகள் ஸ்ட்ராபெரி மூன் எனப் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.