த்ரிஷ்யம் பாணியில் நடந்த ஒரு நிஜ கொலை. அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

மோகன்லால் நடிப்பில் ஜீத்துஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் ஒரு கொலையை செய்துவிட்டு அந்த பிணத்தை கட்டுமானப்பணி நடைபெற்று கொண்டிருந்த காவல்நிலையத்தில் புதைத்துவிடுவார். அந்த பிணம் கைப்பற்றப்படும் வரை இந்த வழக்கை தொடர முடியாது என்ற நிலையில் அந்த படம் முடிவடையும்

இந்நிலையில் ஜீத்துஜோசப் இந்த படத்தை எடுப்பதற்கு ஒருசில வருடங்களுக்கு முன்பே இதேபோன்று ஒருவர் கொலை செய்து கட்டிடத்தின் அடியில் புதைத்துள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த வைக்கம் என்ற பகுதியை சேர்ந்த அனிஷ் என்பவர் கள்ளநோட்டு அச்சிட்ட வழக்கில் காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்த போது எட்டு வருடங்களுக்கு முன் தனக்கும் மாத்யூஸ் என்பவருக்கும் இடையே நடந்த தகறாரில் மாத்யூஸை கொலை செய்துவிட்டு தான் கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தின் அடியில் புதைத்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். இந்த தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் கூறிய கட்டிடத்தில் தோண்டி பிணத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே தனது தந்தை மாத்யூஸ் காணாமல் போயுள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவருடைய மகள் நாய்சி காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தை பாராட்டிய ஐரோப்பிய ஸ்டண்ட்மேன்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன் நடித்து வரும் தல 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முதலமைச்சர் ஓபிஎஸ் உடன் பிரபல நடிகர் திடீர் சந்திப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரகளை திடீரென சந்தித்துள்ளார்.

கூகுளின் டாப்-10ல் இடம்பிடித்த ரஜினியின் 'கபாலி'

2016ஆம் ஆண்டு முடிய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் கூகுள் தேடியந்திரத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.

நான் காணாமல் போகவில்லை - ஜெ.உறவினர் தீபா

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாரைக் காணவில்லை என்று பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா நேற்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்

'சரோஜா' தயாரிப்பாளருக்கு வெங்கட்பிரபுவின் அடுத்த படம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சென்னை 28 II' திரைப்படம் பணத்தட்டுப்பாடு, வர்தா புயல் போன்ற பிரச்சனைகளையும் மீறி நல்ல வசூல் பெற்றுள்ளது.