close
Choose your channels

வெங்கட்பிரபுவை அடுத்து சிம்புவை இயக்கும் பிரபல இயக்குனர்

Tuesday, August 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' படம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வெங்கட்பிரபுவை அடுத்து சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண், சமந்தா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் 'Attarintiki Daredi. இந்த படம் ஏற்கனவே இந்தி, கன்னடம் உள்பட ஒருசில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட் ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா நிறுவனம் பெற்றிருந்தது.

எனவே இந்த படத்தில் அஜித் அல்லது விஜய், பவன்கல்யாண் வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால், சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment