தேர்தலில் நிற்காமல் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கிய சிம்பு

  • IndiaGlitz, [Thursday,May 12 2016]


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் சிம்பு தனது பங்காக நேற்று ஒரு பாடலை யுடியூபில் வெளியிட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிம்பு வெளியிட்ட இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிம்பு எழுதி இசையமைத்த இந்த பாடலை சிம்புவும் விடிவி கணேஷூம் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் இந்த பாடல் வெளிவந்த ஒரே நாளில் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. தேர்தல் குறித்த விழிப்புணர்வு பாடலுக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கிடைத்ததே இந்த பாடலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

More News

சமந்தாவின் முதல் முயற்சி

'சமந்தா' நடித்த 'தெறி மற்றும் '24' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப்படமாகி உள்ளதால் உற்சாகமாக இருக்கும் அவர் அடுத்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.....

பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரன்னிங் டைம்

'ஜிகர்தண்டா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹாவின் அடுத்த படமான 'கோ 2' நாளை பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. தேர்தல் சமயத்தில் வரும் அரசியல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'கோ 2' திரைப்படம் மொத்தம் 124 நிமிடங்கள் அĪ

அருண்விஜய்யின் அடுத்த பட டைட்டில் இதுதான்...

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் நடித்த பின்னர் ஒரு பெரும் திருப்புமுனையை பெற்ற நடிகர் அருண்விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலை இன்று காலை 8 மணிக்கு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் அறிவிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்'. திரை முன்னோட்டம்

'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜி.வி.பிரகாஷ் கடந்த மாதம் வெளியான 'தெறி' படத்துடன் 50 படங்களுக்கு இசையமைத்து இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்துள்ளார்...

பாபிசிம்ஹாவின் 'கோ 2' திரை முன்னோட்டம்.

கடந்த 2011ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே தயாரிப்பாளர் தயாரித்த படம்தான் 'கோ 2'....