கொரோனா நிதி சர்ச்சை: தளபதி விஜய்க்கு ஆதரவு அளித்த சிம்பு தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார் என்பதும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலன் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, விஜய்யின் நிதியுதவி காலதாமதமானது குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, ‘வருமான வரித்துறையினர் வாரி சுருட்டி கொண்டு போன பிறகும், அங்கும் இங்கும் சிதறி இருந்த பணத்தை சேர்த்து கொடுப்பதற்கு நேரம் தேவை இல்லையா? என்று பதிலளித்து இருந்தார்.
குருமூர்த்தியின் இந்த பதிலுக்கு பெரும்பான்மையோர் கண்டனம் தெரிவித்தனர். பெரிய கோடீஸ்வரர்கள் பலர் ஒரு ரூபாய் கூட கொடுக்காத நிலையில் தன்னுடைய மக்களுக்காக ரூ.1.30 கோடி கொடுத்த விஜய்யை கேலி செய்வதா? என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததிலிருந்து இதுவரை கொரானா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத #குருமூர்த்தி .. தன் இக்கட்டையும் கடந்து தளபதி விஜய் நேயமுடன் உதவியதை இக்கட்டையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நிலை பிறழ்ந்த செயல் இது! என்று கூறியுள்ளார். சுரேஷ் காட்சியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததிலிருந்து இதுவரை கொரானா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத #குருமூர்த்தி ..
— sureshkamatchi (@sureshkamatchi) May 9, 2020
தன் இக்கட்டையும் கடந்து #Thalapathy @actorvijay
நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நிலை பிறழ்ந்த செயல் இது! pic.twitter.com/Z5y62b9wEt
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments