நயன்தாரா பட இயக்குனருக்கு ஏற்பட்ட சோகம்: சிம்பு இரங்கல்
- IndiaGlitz, [Tuesday,November 27 2018]
நயன்தாரா நடித்த வெற்றிப்படங்களில் ஒன்றான 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சனின் தந்தை நேற்று சென்னையில் காலமானார்.
நெல்சன் தந்தை மறைந்த செய்தி அறிந்ததும் நடிகர் சிம்பு, நெல்சனின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தையின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் மகத்தும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சனின் முதல் படம் 'கோலமாவு கோகிலா'வாக இருந்தாலும் கடந்த சில வருடங்களுக்கு முன் சிம்பு நடிக்கும் 'வேட்டை மன்னன்' என்ற படத்தை அவர் இயக்குவதாக இருந்தார். ஆனால் ஒருசில காரணங்களால் இந்த படம் டிராப் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.