"வரணும்..பழைய பன்னீர் செல்வமா வரணும்" STR ரசிகர்கள் பகிரும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு குத்துச்சண்டை பயிற்சி பெறுவது போன்ற வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
சிம்பு சமீபமாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். நடிக்கப் போவதாக சொல்லப்பட்ட படங்களும் அடுத்தடுத்து கைவிடப்பட்ட நிலையில் படப்பிடிப்புக்கே வர மாட்டார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து படங்கள் கைவிடப்பட்டதால் வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்களால் அவரும் அவரது ரசிகர்களும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
பின்னர் சிம்பு சபரி மலைக்கு மாலை போட்டு விட்டதாக படங்களும் வீடியோவும் வெளிவந்தன.
மற்ற நடிகரின் ரசிகர்கள் தங்கள் நடிகரின் படங்கள் வெளியீடு, இசை வெளியீடு எனக் கொண்டாடிக்கொண்டிருக்க சிம்புவின் ஒரு போட்டோ வெளிவந்தாலே அவரது ரசிகர்கள் அதை பகிர்ந்து திருப்தி பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் சிம்பு தன்னுடைய அடுத்த படமான மாநாட்டிற்காக குத்துச்சண்டை பயிற்சி பெறுவது போன்ற வீடியோ ஒன்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்வீட்டர் தளத்தில் பதிவேற்றிருந்தார். இப்போது அந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
#STR pic.twitter.com/UT91UdSc2V
— sureshkamatchi (@sureshkamatchi) December 10, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com