சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் ஒரு புதுமை?

  • IndiaGlitz, [Thursday,November 10 2016]

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு புதுமை உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் முதல் பாதியில் இரண்டு அல்லது மூன்று பாடல்களும் இரண்டாவது பாதியில் மீதி பாடல்களும் இருக்கும். ஆனால் இந்த படத்தில் முதல்முறையாக ஐந்து பாடல்களும் முதல் பாதியிலேயே உள்ளதாம்.
இரண்டாவது பாதி முழுக்க முழுக்க ஆக்சன் பகுதி என்பதால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க இரண்டாவது பாதியில் பாடல்களே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே முதல் பாதி 70 நிமிடங்களும் செம ரொமான்ஸ் காட்சிகளும் இரண்டாவது பாதி 65 நிமிடங்களும் விறுவிறுப்பான ஆக்சன் பகுதிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கவுதம் மேனன் படத்தின் அடுத்த ஹீரோ இவரா?

சிம்பு, மஞ்சிமாமோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையாடா' நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

ஜெயம் ரவி குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்

ஜெயம் ரவி நடிகராகவும், அவருடைய சகோதரர் ஜெயம் ராஜா நடிகர் மற்றும் இயக்குனராகவும், ஜெயம் ரவியின் தந்தை மோகன் எடிட்டராகவும்...

'விஜய் 61' படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி

இளையதளபதி விஜய் நடித்து வந்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விஜய் 61'...

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு' படம் பல தடைகளை கடந்து நாளை வெளியாக இருந்தது.

அஜித் செல்லவுள்ள அடுத்த நாடு இதுதான்

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெற்றது என்பதை அறிவோம்.