சிம்பு-வெங்கட்பிரபு படத்தின் புதுமையான டைட்டில்

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படம் 'பில்லா' உள்பட எந்த படத்தின் தொடர் பாகம் இல்லை என்பதும், புதிய திரைக்கதையில் உருவாகவுள்ள அதிரடி ஆக்சன் படம் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் புதுமையான டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'எஸ்டிஆர் அதிரடி வெங்கட்பிரபு ஆக்சன்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மிக விரைவில் அதிகாரபூர்வமாக டைட்டிலை படக்குழுவினர் அறிவிக்கவுள்ளனர்.

வெங்கட்பிரபு இயக்கிய 'கோவா' படத்தில் ஏற்கனவே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சிம்பு தற்போது அவரது முழுநீள ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டிலே யாரும் எதிர்பாராத வகையில் அட்டகாசமாக இருப்பதால் படமும் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் மிகவிரைவில் சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ளது.