முடிஞ்சா குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாங்க..சீமான்

  • IndiaGlitz, [Friday,January 13 2017]

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதற்கு பதில் கூறியுள்ள பிரபல இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் கூறியதாவது:
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். தயவுசெய்து குடியரசு தலைவர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வாருங்கள். ஆனால் அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் உச்சநீதிமன்றம் காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டபோதும் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகாவில் ஆட்சியை முதலில் கலைத்துவிடுங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் முல்லை பெரியாறு விஷயத்தில் அத்துமீறும் கேரளாவில் ஆட்சியை கலையுங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்லியும் அமைக்க மறுக்கும் மத்திய அரசையும் கலைத்துவிட்டு நாடு முழுவதும் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாருங்கள், இதையெல்லாம் செய்துவிட்டு பின்னர் தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாருங்கள்
தமிழர்களின் உணர்வுகளுடன் யாரும் விளையாட வேண்டாம். உலகத்தில் எந்த நாட்டிலும் சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கு கட்சி வைக்கவில்லை. தமிழன் மட்டுமே தன்மானத்திற்கு கட்சி வைத்தான். நிறைய சகித்துவிட்டோம், நிறைய பொறுத்துட்டோம். இனிமேலும் சகித்து கொண்டும், பொறுத்து கொண்டும் இருக்க மாட்டோம்' என்று சீமான் கூறியுள்ளார்.

More News